மணிரத்னம் படத்தில் மம்முட்டி, கார்த்தி, ஐஸ்வர்யாராய் – இது புதிய செய்தி

1436869407-5732மணிரத்னத்தின் படத்தில் யார் நடிக்கிறார்கள்?

இந்தக் கேள்விக்கு எப்படியும் மணிரத்னம் பதில் சொல்லப் போவதில்லை. வழக்கமாக இதுபோன்ற ஐயங்களை அறிக்கை மூலம் தீர்க்கும் வைரமுத்துவும் பிறந்தநாள் பிஸியில் இருக்கிறார். கிடைக்கிற தகவல்களோ உறுதி செய்யப்படாதவை.

முதலில் கார்த்தி என்றனர். பிறகு கார்த்தி, துல்கர் சல்மான் என்றனர். சமீபத்திய தகவல் கார்த்தி, மம்முட்டி, ஐஸ்வர்யாராய்.

இந்த மூவருமே மணிரத்னத்துடன் தொடர்புடையவர்கள். ஐஸ்வர்யாராய் அறிமுகமானது மணிரத்னத்தின் படத்தில். தமிழில் மம்முட்டிக்கு பிரேக் தந்த படம் மணிரத்னத்தின் தளபதி. நடிக்க வரும்முன, இயக்குனர் ஆசையில் கார்த்தி உதவி இயக்குனராக பணிபுரிந்தது மணிரத்னத்திடம்.

படத்தில் நடிப்பவர்கள் குறித்து இன்னொரு பட்டியல் போடப்படும் முன்பு, மணிரத்னமே தனது படத்தில் நடிப்பவர்கள் குறித்து சொல்ல வேண்டாம் – கோடிட்டு காட்டினாலே புண்ணியமாக போகும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries