பாகுபலி படம் 5 நாளில் ரூ.215 கோடி வசூல் செய்து சாதனை

f0c25efc-159d-4db0-b03e-6c452ac19589OtherImage‘பாகுபலி‘ படம் கடந்த வாரம் ரிலீசாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படம் உலகம் முழுவதும் 4 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்பட்டன. தமிழகம் முழுவதும் 500 தியேட்டர்களில் வெளியானது.

படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.76 கோடி வசூலித்தது. ஐந்து நாட்களில் ரூ.215 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தை ரூ.250 கோடி செலவில் எடுத்து இருந்தனர்.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா போன்றோர் நடித்துள்ளனர். ராஜமௌலி இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகி இருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries