காதலில் சிக்கிய பிரியாமணி

Mustafa-Rajதமிழில் ‘பருத்தி வீரன்’ படம் மூலம் பிரியாமணி பிரபலமானார். தொடர்ந்து ‘மலைக்கோட்டை’, ‘தோட்டா’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ராவணன்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் கைவசம் தற்போது படங்கள் இல்லை.

ராவணன் படத்துக்கு பின் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. இயக்குனர்கள் அவரை ஒதுக்குகிறார்கள். இதனால் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து இருப்பதாகவும் பெற்றோர் மாப்பிள்ளை பார்ப்பதாகவும் செய்திகள் பரவின.

இந்த நிலையில் தான் பிரியாமணி காதலுடன் இருப்பது போன்ற படம் வெளிவந்துள்ளது. பிரியாமணி காதலிப்பவரின் பெயர் முஸ்தபாராஜ் என்றும் மும்பையில் தொழில் அதிபராக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

சி.சி.எல் கிரிக்கெட் போட்டியில் தான் இருவரும் சந்தித்துக் கொண்டார்களாம். முதலில் நட்பாக பழகி பிறகு காதல் வயப்பட்டுள்ளனர். ரகசியமாக இருந்த அவர்களின் காதல் இப்போது அம்பலமாகியுள்ளது. விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். இவர்கள் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்து விட்டனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries