இயக்குனர் ராமும், மிஷ்கினும் இணைந்து தீட்டும் சவரக்கத்தி

1436944966-035மெர்சலாயிடாதீங்க. சவரக்கத்தி படத்தோட பெயர். மிஷ்கின் படம் எடுத்தால் நகரசுத்தி என்றா வைப்பார்.

மிஷ்கின் தனது லோன் வுல்ஃப் புரொடக்ஷன் சார்பாக ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை எடுத்தது தெரியும். அதில் தயாரிப்பு, இயக்கம், கதை, நடிப்பு எல்லாமே அவர்தான். கடைசியில் போஸ்டரும் ஒட்டினார்.

அவரது இரண்டாவது தயாரிப்புக்கு வைத்திருக்கும் பெயர்தான், சவரக்கத்தி. படத்தில் நாயகனாக நடிப்பது, இயக்குனர் ராம். நாயகி பூர்ணா. மிஷ்கின் வில்லன். இயக்கத்தை கவனிப்பவர், ஜி.ஆர்.ஆதித்யா. படத்தின் கதையை மிஷ்கின் எழுதியுள்ளார்.

இன்று சவரக்கத்தி பூஜையுடன் ஆரம்பமாகிறது. ராம் கதாநாயகனாக பூர்ணா கதாநாயகியாக மிஷ்கின் வில்லனாக தீட்டும் சவரக்கத்தி என்றே போஸ்டரில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அறுக்காமல் விடமாட்டார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online