நயன்தாராவின் மாயா படத்துக்கு வரிச்சலுகை கிடைப்பதில் சிக்கல்

1437125859-0122முன்னணி நடிகைகள் தலா ஒரு பேய் படத்தில் நடித்து வருகின்றனர். அப்படி இல்லாதவர்களைப் பார்த்து, இன்னுமா பேயாக நடிக்கலை என்று கேட்பதால், இதுவரை பேயாக நடிக்காதவர்களும் பேய் வேஷத்துக்கு அலைகிறார்கள்.

நயன்தாரா நடித்திருக்கும் ஆவிப் படம் மாயா. அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். முக்கியமான வேடத்தில் ஆரி.

படத்தை முடித்து தணிக்கைக்கு அனுப்பினால், யு சான்றிதழ் தரமுடியாது, யுஏ தான் தர முடியும் என்று யுஏ சான்றிதழ் தந்துள்ளனர். 30 சதவீத வரிச்சலுகைக்கு யு சான்றிதழ் அவசியம்.

இந்த மாத இறுதியில் படத்தை வெளியிட இருக்கும் நிலையில், யுஏ சான்றிதழுடன் வெளியிடுவதா இல்லை ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பி யு சான்றிதழுக்கு முயற்சிப்பதா என்று குழப்பத்தில் இருக்கிறது மாயாவின் தயாரிப்பாளர் தரப்பு.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online