விஜய் சேதுபதியை இயக்கும் காக்கா முட்டை மணிகண்டன்

Vijay-Sethupathi-8மணிகண்டன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘காக்க முட்டை’. இப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கி குவித்தது.

இப்படத்தை தனுஷ் மற்றும் வெற்றிமாறன் தயாரித்திருந்தார்கள். படம் வெளியான பிறகு சினிமா ரசிகர்கள் அனைவரையும் இப்படம் கவர்ந்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மணிகண்டன், ‘குற்றமே தண்டனை’ என்ற படத்தை இயக்க ஆரம்பித்தார்.

விறுவிறுப்பாக நடத்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில், விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்கவுள்ளார் மணிகண்டன். இப்படத்தை பிரபல விநியோகஸ்தர் மதுரை அன்பு தனது கோபுரம் பிலிம்ஸ் மூலமாக தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries