விஜய்யோடு பாட்டு பாடிய ஸ்ருதிஹாசன்

Shruthi-sings-a-duet-with-Vijayவிஜய் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளிவந்த ‘துப்பாக்கி’ படத்தில் கூகுள் கூகுள் என்ற பாடலை விஜய் பாடினார். விஜய் பாடிய அந்த பாட்டு பெரிய அளவில் ஹிட்டானதைத் தொடர்ந்து, அவர் அடுத்தடுத்து நடித்த ‘தலைவா’, ‘ஜில்லா’, ‘கத்தி’ ஆகிய படங்களிலும் விஜய் தொடர்ந்து தனது சொந்த குரலில் ஒரு பாடினார். அனைத்து பாடல்களும் எதிர்பார்த்ததைவிட பெரிய அளவில் ஹிட்டாயின.

இந்நிலையில், விஜய் தற்போது நடித்து முடித்துள்ள ‘புலி’ படத்திலும் தனது சொந்த குரலில் ஒரு பாடல் பாடியுள்ளார். இந்த பாடலில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால், இப்பாடலை விஜய்யுடன் சுருதிஹாசனும் இணைந்து பாடியுள்ளார் என்பதுதான். இந்த பாடலுக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

ஏற்கெனவே, விஜய் நடிப்பில் வெளிவந்த ‘தமிழன்’ படத்தில் விஜய்யும், அதில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா சோப்ராவும் இணைந்து ஒரு பாடியுள்ளனர். அதன்பிறகு, தற்போதுதான் விஜய் தன்னுடன் நடிக்கும் நாயகியுடன் இணைந்து பாடல் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் நடித்துள்ள ‘புலி’ படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சுருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி கபூர், சுதீப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries