இதயம் உடைந்துவிட்டது, நான் அழுகிறேன் – அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தரும் சிம்பு

20-simbu-criesதமிழ் சினிமாவில் ஒரு படம் தள்ளிப் போவதும், வெளிவராமல் மொத்தமாக முடங்கிப் போவதும் உலக அதிசயமில்லை. அடிக்கடி நடப்பதுதான். வாலு படத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அதனை முன்னிட்டு எழும் அக்கப்போர்களைப் பார்த்தால் படத்துக்கு தடை விதித்தார்களா இல்லை நாட்டுக்கே பொருளாதார தடை விதித்தார்களா என்று ஐயப்பட வேண்டியுள்ளது. சிம்பு ஒருபடி மேலே.

வாலு படம் வெளியாகாததால் ரசிகர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாகவும், அதை கேட்டு இதயமே உடைந்துவிட்டதாகவும், தற்போது அழுது கொண்டிருப்பதாகவும் ட்வீட் செய்திருக்கிறார்.

ஒரு படம் தள்ளி வைக்கப்பட்டதற்காக தற்கொலை முயற்சியா? அந்தளவுக்கு சீரழிந்துவிட்டதா சமூகம்?

மனதை தளரவிடாதீர்கள், வலிமையாக இருங்கள் என்று ரசிகர்களுக்கு ட்விட்டரில் சிம்பு அறிவுரை கூறியுள்ளார். அடக் கடவுளே. ஒரு படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டதற்கே மன வலிமை இழக்கிறார்களா தமிழ்நாட்டில்?

எங்கே போய்க் கொண்டிருக்கிறது தமிழகம்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries