விக்ராந்தின் தாக்க தாக்க ஜூலை 31ம் தேதி ரிலீஸ்

Vikanthவிக்ராந்த் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தாக்க தாக்க’. இதில் விக்ராந்துடன் அரவிந்த் சிங், ராகுல் வெங்கட், லீமா, அபிநயா, பார்வதி நிர்பன், அருள்தாஸ், சரித்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தை விக்ராந்தின் அண்ணனும், இயக்குனருமான சஞ்சீவ் இயக்கி உள்ளார்.

இப்படத்தின் புரோமோவுக்காக விக்ராந்தின் நண்பர்களான விஷால், ஆர்யா, விஷ்ணு ஆகியோர் இணைந்து தாக்க தாக்க என்ற பாடலுக்கு நடனமாடினார்கள். சமீபத்தில் இந்த பாடல் வெளியானது. இது ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்றது. மேலும் படத்தை பார்ப்பதற்கான ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இப்படத்தை ஜூலை 31ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். இப்படத்தை உலகெங்கும் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்.

உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் ‘கெத்து’ படத்தில் விக்ராந்த் ஸ்டைலான வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online