ஜெய்யின் புகழ் டிரைலர் ஜூலை 23ம் தேதி ரிலீஸ்

B31s2ihCYAEWgLnஜெய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘புகழ்’. இதில் ஜெய்க்கு ஜோடியாக சுரபி நடித்திருக்கிறார். இப்படத்தை ‘உதயம் என்.எச்.4’ படத்தை இயக்கிய மணிமாறன் இயக்கியுள்ளார்.

விவேக்-மெர்வின் என்னும் இருவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இவர்களுடைய இசையில் அனிருத் சமீபத்தில் இப்படத்திற்காக ஒரு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.

இப்படம் ஆக்‌ஷன் கலந்த காதல் படமாக உருவாகியிருக்கிறது. விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இப்படத்தின் டிரைலர் ஜூலை 23ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இயக்குனர் மணிமாறன் தனது ஊரில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இப்படத்தை உருவாக்கி இருக்கிறார். இப்படம் ஜெய்க்கு புகழ் கொடுக்கும் படமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries