காதலில் முடிந்த பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் உறுமீன் நட்பு

1437305789-84ஒளிப்பதிவாளர் குகன் இயக்கிய இனிது இனிது படத்தில் அறிமுகமானவர் ரேஷ்மி மேனன்.

அதன் பிறகு, தேநீர் விடுதி உள்பட சில படங்களில் நடித்தார். பாபி சிம்ஹா நாயகனாக நடித்துவரும் உறுமீன் படத்தில் இவர்தான் நாயகி.

இந்தப் படத்தின் போது பாபி சிம்ஹாவுக்கும், ரேஷ்மி மேனனுக்கும் காதல் ஏற்பட்டதாகவும், ரேஷ்மியின் வீட்டினர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜும், அவரது தந்தையும் ரேஷ்மியின் வீட்டினரை சமாதானப்படுத்தியதாகவும், விரைவில் இவர்கள் திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நடக்கயிருப்பதாகவும் தகவல்.

இதனை பாபி சிம்ஹா மறுத்தார். இந்த செய்தியில் உண்மை இல்லை என்றார். ஜோ‌திகாவுடன் காதலே இல்லை என்றுதான் சூர்யாவும் கூறினார். ஆனால், உண்மை அதுவல்லவே.

பாபி சிம்ஹா கூறுவது பொய், ரேஷ்மியும் அவரும் காதலிக்கிறார்கள். அடுத்த மாதமே இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்கலாம் என்கிறார்கள் படயூனிட்டில்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online