பாகுபலி 2ம் பாகம் செப்டம்பர் மாதம் தொடக்கம்

Baahubali10ராஜமௌலி இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘பாகுபலி’. இதில் ராணா, பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.

250 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 9 நாட்களில் 300 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இது தென் இந்திய திரைப்படங்களில் பாகுபலி தான் முதல் படம் என்று கூறப்படுகிறது.

இரண்டு பாகங்கள் கொண்ட இப்படத்தின் முதல் பாகம்தான் தற்போது வெளியாகியுள்ளது. இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 40 சதவிகிதம் முடிந்து விட்டது. தற்போது இதன் படப்பிடிப்பு மீண்டும் செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது.

முதல் பாகத்தில் தமன்னா கதாநாயகியாக வலம் வந்தார். இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா கதாநாயகியாக வலம் வர இருக்கிறார். தற்போது வெளியாகியுள்ள பாகுபலி படத்தின் பிரம்மாண்டத்தை விட பாகுபலி 2 மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online