புலி டீசரின் புதிய சாதனை

vijays-look-puliவிஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘புலி’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சுருதிஹாசன் மற்றும் ஹன்சிகா நடித்துள்ளார்கள். மேலும் ஸ்ரீதேவி, சுதீப், நந்திதா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சிம்பு தேவன் இப்படத்தை இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் டீசர் விஜய் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்றது. மேலும் குறைந்த நாட்களிலேயே யூடியூப்பில் அதிக பார்வையாளர்கள் இந்த டீசரை பார்த்துள்ளனர். இதுவரை 59 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ள இந்த டீசர் விரைவில் 60 லட்சத்தை தொடவுள்ளது.

இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களின் டீசரில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘ஐ’ படத்தின் டீசரை மட்டுமே 60 லட்சத்திற்கு மேற்பட்டோர் பார்த்துள்ளனர். தற்போது ‘புலி’ டீசர் 60 லட்சத்தை எட்டி ஐ படத்தின் சாதனையை தொடவுள்ளது.

‘புலி’ பாடல்கள் ஆகஸ்ட் 2ம் தேதியும், படம் செப்டம்பர் 17ம் தேதியும் வெளியிட இருக்கிறார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries