300 கோடி கிளப்பில் நுழைந்த பாகுபலி

bhaa1300 கோடிகள் வசூலித்த முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற பெருமையை பாகுபலி பெற்றிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியான பாகுபலி ஒன்பது தினங்களில் 303 கோடிகள் வசூலித்துள்ளது. அதன் இந்தி பதிப்பு மட்டுமே 50 கோடிகள் வசூலித்தது சாதனையாக கருதப்படுகிறது. எந்த இந்தி டப்பிங் படமும் இந்தளவு வசூலை பெற்றதில்லை.

இதற்கு முன் ஷங்கரின் எந்திரன் 290 கோடிகள் அளவுக்கு வசூல் செய்ததே தென்னிந்திய சினிமாவின் அதிகபட்ச வசூலாக இருந்தது. அதனை பாகுபலி முறியடித்துள்ளது.

பத்து தினங்கள் கடந்தும் படம் அமோக ஆதரவுடன் ஓடிக் கொண்டிருப்பதால் 350 கோடிகளை படம் சாதாரணமாக தாண்டும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries