இருபது நாளில் தயாராகும் ப்ரியதர்ஷனின் எய்ட்ஸ் விழிப்புணர்வு படம்

1437493707-0718திங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் அமலா பால் தயாரிக்க, ப்ரியதர்ஷன் இயக்கும் படம், இருபதே நாளில் தயாராக உள்ளது. எய்ட்ஸ் விழிப்புணர்வை மையப்படுத்தி இந்தப் படத்தை ப்ரியதர்ஷன் இயக்குகிறார்.

எய்ட்ஸ் விழிப்புணர்வு என்பதால் ஆவணப்படம் போல் இருக்கும் என நினைக்க வேண்டியதில்லை. நகைச்சுவையாக இந்தப் படத்தை ப்ரியதர்ஷன் எடுக்கிறார். படத்தின் கடைசி நிமிடங்கள் அனைவரையும் கண்கலங்க வைக்கும் என அவர் கூறினார்.

காலை ஆறு மணி முதல் மாலை ஐந்து மணிவரை நடக்கும் சம்பவங்களே படம். ஆகஸ்ட் 10 படத்தை தொடங்கி ஆகஸ்ட் 30-இல் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார்.

ரத்த பரிசோதனைக்காக வரும் எட்டு நபர்களை பற்றிய கதையிது. அசோக் செல்வன், பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி மற்றும் கூத்துப்பட்டறையின் நாடகக் கலைஞர்கள் நடிக்கின்றனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய கலை இயக்கத்தை சாபு சிரில் கவனிக்கிறார்.

படத்தை எடுத்த பின் ரஹ்மானிடம் திரையிட்டு காட்டி, அவருக்குப் படம் பிடித்திருந்தால் அவரையே பின்னணி இசையமைக்க வைக்கும் முடிவில் இருக்கிறார் ப்ரியதர்ஷன்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries