ஜெயலலிதா, நக்மா, சிம்ரன் கெட்-அப்களில் நடித்த ஹன்சிகா

Actress-Hansika-Latest-Hot-stills-2சிம்பு-ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘வாலு’ படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்கு காத்திருக்கிறது. இப்படம் கடந்த ஜூலை 17ம் தேதியே ரிலீசாக வேண்டியது. மேஜிக் ரேஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கால் இப்படம் ரிலீசாகாமல் தள்ளிப்போனது. இப்படம் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இப்படம் குறித்த புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

வாலு படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் முடிந்த பிறகு கடைசியாக ஒரு பாடலை மட்டும் படமாக்கினர். இந்தப் பாடலில் எம்ஜிஆர், ரஜினி, அஜித் கெட்-அப்களில் சிம்பு ஆடியதாக செய்திகள் வெளியானது. இதில் ஜெயலலிதா, நக்மா, சிம்ரன் ஆகியோரின் கெட்-அப்களில் ஹன்சிகாவும் நடனமாடியிருக்கிறார்.

இந்த பாடலுக்காக சரோஜாதேவி, குஷ்பு, சிம்ரன் என மூன்று தலைமுறை நடிகைகளுடன் சிம்பு நடனமாடுவதாக இருந்தது. கடைசியில் அவர்களை தவிர்த்து ஹன்சிகாவுடன் நடனம் ஆடினார் சிம்பு.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online