வித்யாபாலன் வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார். ஏற்கனவே சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘த டர்ட்டி பிக்சர்ஸ்’ படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்தார். ‘கஹானி’ படத்தில் தீவிரமாக செயலில் ஈடுபடும் கணவனை கொலை செய்யும் கேரக்டரில் வந்தார்.
அடுத்து மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி வேடத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாற்றை சினிமா படமாக எடுக்கின்றனர். இந்த படத்தில் இந்திராகாந்தி வேடத்தில் வித்யாபாலன் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தை மணீஷ்குப்தா இயக்குகிறார். அவர் கூறும்போது, ‘‘படத்துக்கான கதையை வித்யாபாலனிடம் சொன்னோம். அவருக்கு பிடித்தது. ஆனாலும் இதில் நடிப்பது பற்றி இன்னும் தனது முடிவை அவர் சொல்லவில்லை’’ என்றார்.
இதுகுறித்து வித்யாபாலன் கூறும்போது, ‘‘இந்திராகாந்தி வேடத்தில் நடிக்க என்னை அணுகி பேசி உள்ளனர். நான் நடிக்கமாட்டேன் என்று மறுக்கவில்லை.
ஆனாலும் அவர்களிடம் சம்பந்தப்பட்டவர்களிடம் தேவையான அனுமதியை முதலில் வாங்கி வாருங்கள் அதன்பிறகு பேசலாம்’’ என்றேன். எனக்கு இந்திராகாந்தி வேடத்தில் நடிக்க விருப்பம் உள்ளது’’ என்றார்.