அஜித் போன்று ஜெய்யும் புகழ் பெற வேண்டும்: சுரபி

Jai-Surabhi-Pugazh-Tamil-Movie-Stills-9‘இவன் வேற மாதிரி’, ‘வேலையில்லா பட்டதாரி’ ஆகிய படங்களில் நடித்த சுரபி, தற்போது ஜெய்க்கு ஜோடியாக ‘புகழ்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜெய்க்கு இணையாக சுரபி நடித்து வருகிறார். பிலிம் டிபார்ட்மெண்ட் சுஷாந்த் தயாரிப்பில் இயக்குனர் மணிமாறன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் குறித்து சுரபி கூறும்போது, ‘இப்படத்தில் எனது கேரக்டரின் பெயர் புவனா. நான் நிஜ வாழ்வில் இருப்பது போன்று மனதில் உள்ளதை உள்ளபடி எதையும் மறைக்காமல் கூறும் நேரடியாக பேசும் கதாப்பாத்திரம் அமைந்திருந்தது.

அதனாலோ என்னவோ இந்த கதாபாத்திரம் என் மனதுக்கு பிடித்து போன பாத்திரமானது. இப்படத்தில் ஜெய் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து நடிப்பது செம த்ரில்.

எந்தக் காரியத்தில் ஈடுப்பட்டாலும் அதில் வெற்றிப் பெற முழு முயற்சி எடுக்க வேண்டும் என தீவிரமாக நம்புபவர். கார் ரேசிங்கில் பெருத்த ஈடுபாடுக் கொண்ட ஜெய், அஜித் போன்று பல போட்டிகள் வென்று புகழ்பெற வாழ்த்துகிறேன்.

இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் நடித்ததும், ஒளிப்பதிவாளர் வேல்ராஜுடன் மீண்டும் இணைவதும் சந்தோஷமாக இருந்தது. மணிமாறன் சுவராசியமான காட்சிகளை பதட்டமில்லாமல் படமாக்க கூடியவர். இவரது இயக்கத்தில் வேலையை செய்ததுதான் எனக்கு இயக்குனர் ராம் கோபால் வர்மாவின்’ ‘அட்டாக்’ படத்தில் நடிப்பதற்கு ஒரு பயிற்சியாக இருந்தது.

‘அட்டாக்’ படத்தில் நான் ஒரு பைக் மெக்கானிக் ரோலில் நடிக்கிறேன். நிஜ வாழ்வில் இப்படி ஒருவரை நான் சந்தித்து இல்லை, ஆகவே இந்த கதாபாத்திரம் எனக்கு சவாலாகவே இருந்தது.

விவேக் மெர்வின் இசையில் அனைத்து பாடல்களும் முணுமுணுக்க வைக்கிறது. ‘புகழ்’ படத்தின் டிரைலர் 23 ஆம் தேதி வெளிவருகிறது. ஒரு சாதாரண ரசிகை போல் டிரைலரை பார்க்க பெரும் ஆவலாக உள்ளேன்.” எனக் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries