குரங்கு கையில பூ மாலையாகிப் போன கோலிசோடா நாயகி

Goli-Soda-Heroine-Chandini-New-Images-20விதவிதமான மனநிலை கொண்ட நான்கு பேரிடம் சிக்கி தவிக்கும் ஒரு பெண்ணின் நிலைமையை மையப்படுத்தி உருவாகி வரும் புதிய படம் ‘குரங்கு கையில பூ மாலை’. இப்படத்தில் நாயகர்களாக ஜெகதீஷ், கௌதம் கிருஷ்ணா இருவரும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் குரங்கு கையில் கிடைத்த பூமாலையாய் சிக்கித் தவிக்கும் பெண்ணாக ‘கோலிசோடா’ படத்தின் நாயகி சாந்தினி நடித்துள்ளார். மேலும், பல்வேறு படங்களில் குத்துப்பாடலுக்கு நடனமாடிய நிஷா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கிருஷ்ணன். இவர் ஏற்கெனவே ‘விகடகவி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

படத்தின் இடைவேளை வரை படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், முதலில் இப்படத்திற்கு ‘யுஏ’ சான்றிதழ்தான் கொடுக்க முன்வந்தனர். ஆனால், பிற்பாதியில் கதையின் ஓட்டத்திற்கு முந்தைய காட்சிகள் சரியாக பொருந்தியதால், ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

இப்படத்தை வருகிற ஆகஸ்ட் 7-ந் தேதி வெளியிடவுள்ளனர். இப்படத்தில் நான்கு ஹீரோக்கள், இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் படத்தில் தனியாக எந்தவொரு டூயட் பாடலும், குத்து பாடலும் கிடையாது.

கதையோடு பயணித்தபடியே பாடல்களும் இடம்பெற்றுள்ளது இப்படத்தின் சிறப்பு. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி முடித்துள்ளனர். சாய் அமீர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries