லொள்ளுசபா ராம்பாலாவின் பேய் படம் – நாயகனாக சந்தானம்

1437572241-3594தன்னுடன் பணியாற்றிய முருகன், பிரேம் ஆனந்த் இருவரையும் இயக்குனராக்கி சந்தானம் தயாரித்து நடித்த படம், இனிமே இப்படித்தான்.

இந்தப் படத்தை தொடர்ந்து லொள்ளுசபா நிகழ்ச்சியின் இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த ஆவி படத்தை ஆவிகளின் ஹோல்சேல் நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸுக்கு சந்தானம் தனது ஹேண்ட் மேட் நிறுவனம் சார்பில் தயாரித்து தருகிறார். ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் படத்தை வெளியிடும்.

தனக்கென்று ஒரு மார்க்கெட் இருப்பதாக சொல்லும் சந்தானம், பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படத்தை தயாரித்து தருகிறார். இதனால் சம்பளம் போக லம்பாக ஒரு தொகை இவர் கைக்கு முதலிலேயே கிடைத்துவிடுகிறது. அவர் நாயகனாக தொடர்ந்து நடிக்க முடிவெடுத்ததற்கான காரணம் இதுவே என்கிறார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online