புதுச்சேரியில் பாடல் காட்சியுடன் தொடங்கியது பாலாவின் தாரை தப்பட்டை

1437570302-0022பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி நடிக்கும் தாரை தப்பட்டை படம் தஞ்சாவூரின் கிராமப்புறங்களில் படமாக்கப்பட்டு வந்தது.

சசிகுமாரின் கை எலும்பு முறிந்ததால் சில வாரங்கள் படப்பிடிப்பு நடைபெறவில்லை. பிறகு வரலட்சுமிக்கு ஏற்பட்ட விபத்தால் சில வாரங்கள் தடை. பாலா உதவி இயக்குனர் ஒருவரை அடித்துவிட்டார் என பஞ்சாயத்து.

சமீபமாக தாரை தப்பட்டை குறித்து எந்த தகவலும் இல்லை. படப்பிடிப்பும் நடைபெறவில்லை. ஏன் என்ன என்று கேள்வி எழுந்த நேரம், மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார் பாலா.

தற்போது புதுச்சேரியில் ஒரு பாடல் காட்சியை அவர் படமாக்கி வருகிறார். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறும் என படயூனிட் தெரிவித்துள்ளார்.

தாரை தப்பட்டைக்கு இளையராஜா இசையமைக்கிறார். இது அவரது 1000 -வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries