ரஞ்சித், ரஜினி இணையும் படத்தின் பெயர் காளி?

1433170511-8911ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்றதுமே ஒருவித எதிர்பார்ப்பு நிலவியது. ரஞ்சித்தின் மெட்ராஸ் போன்ற யதார்த்த படத்தில் ரஜினி நடிப்பாரா இல்லை ரஜினி பாணியிலான படத்தை ரஞ்சித் இயக்குவாரா?

இதற்கு சமீபத்தில் ரஞ்சித் பதிலளித்தார். முள்ளும் மலரும் படத்தில் வந்த காளியை இந்தப் படத்தில் எதிர்பார்க்கலாம் என்றார்.

ரஜினியின் திரை வாழ்க்கையில் முக்கியமான கதாபாத்திரம், முள்ளும் மலரும் படத்தில் அவர் ஏற்று நடித்த காளி வேடம். ஆக, ரஞ்சித்தின் மெட்ராஸ் படத்தைப் போன்ற யதார்த்தமான கதையில்தான் ரஜினி நடிக்கிறார்.

இந்நிலையில், இவர்கள் இணையும் படத்துக்கு காளி என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக வதந்தி நிலவுகிறது. ரஞ்சித்தின் மெட்ராஸ் படத்துக்கும் காளி என்றுதான் பெயர் வைத்திருந்தனர்.

காளி என அதற்கு முன்பு பெயர் வைக்கப்பட்ட படங்கள் பெரும் விபத்தை சந்தித்தன. அதனால் சென்டிமெண்டாக காளி என்ற பெயர் மீது தமிழ் திரையுலகுக்கு அச்சம் உண்டு. அதன் காரணமாகவே காளி என்ற பெயர் மெட்ராஸாக மாற்றப்பட்டது.

ரஜினி இதுபோன்ற சென்டிமெண்ட்களில் நம்பிக்கை உள்ளவர். அவர் தனது படத்துக்கு காளி என்ற பெயரை அனுமதிப்பாரா என சந்தேகம் எழுப்புகின்றனர் சிலர்.

எப்படியும் சில தினங்களில் படத்தின் பெயர் காளியா இல்லையா என்பது தெரிந்துவிடும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries