நடிகர் நான் கடவுள் ராஜேந்திரனின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரால் பரபரப்பு

1437566987-9253நான் கடவுள் படம் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமானவர் ராஜேந்திரன். இந்த படத்தின் அவரது கேரக்டர் பேசப்பட்டதால் நான் கடவுள் ராஜேந்திரன் என்ற அடைமொழியிலேயே அழைக்கப்பட்டார்

வில்லனாக அறிமுகம் ஆகிய இவர் பாஸ் என்கிற பாஸ்கரன், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, திருடன் போலீஸ், தண்ணில கண்டம், டார்லிங் உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடங்களில் கலக்கினார். திரையில் இவர் தோன்றினாலே ரசிகர்கள் கைதட்டி வரவேற்றனர். இதையடுத்து இவர் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ராஜேந்திரன், கருணாகரன் ஆகியோரது புகைப்படங்களை வெளியிட்டு கண்ணீர் அஞ்சலி என்ற போஸ்டர்கள் சென்னையில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு வந்தன.இதனைக் கண்ட ரசிகர்கள் ராஜேந்திரன் இறந்து விட்டதாக நினைத்து அதிர்ச்சியடைந்தனர்.

விசாரணையில் கண்ணீர் அஞ்சலி என்ற படத்தில் ராஜேந்திரன், கருணாகரன் நடிக்கின்றனர். இப்படத்தின் விளம்பரத்திற்காகவே இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டன என்பது தெரியவந்தது.
இப்படத்தை குகன் இயக்கி வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online