மோடியின் கவர்ச்சி அறிவிப்புகளை கலாய்த்த நேஹா துபியா – குவிகிறது பாராட்டு

1437540297-7543தெருவை சுத்தம் செய் என்று மோடி துடைப்பத்துடன் போஸ் கொடுத்து பல கோடிகளை செலவு செய்ததில் எந்த நன்மையும் விளையவில்லை. பிரபலங்கள் ஆளுக்கொரு துடைப்பத்துடன் தெருவில் போஸ் கொடுத்து, காமன்மேன்களை கடுப்படித்தனர்.

அடுத்து, யோகா செய்யுங்கள் என்று அறைகூவல் விடுத்தார். யோகா பஜனைக்கும் பல கோடிகள் செலவானது. யோகா தினம் முடிந்ததும் மற்ற அறிவிப்புகளைப் போலவே யோகா பரபரப்பும் பிசுபிசுத்தது.

இதையெல்லாம்விட காமெடி, பெண் குழந்தைகளுடன் செல்பி எடுத்துக் கொள்ளுங்கள் என்ற பிரச்சாரம். இதனால் என்ன நன்மை ஏற்பட்டுவிடப் போகிறது? இதற்கெல்லாம் ஏதாவது அர்த்தம் உண்டா? நடிகை நேஹா துபியா இதைத்தான் டைமிங்காக கேட்டிருக்கிறார்.

மும்பையில் பெய்த பெருமழையில் அந்த நகரம் மிதக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதனை தனது ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டவர், நல்ல நிர்வாகம் என்பது மக்களுடன் செல்பி எடுத்துக்கொள்வதோ அல்லது மக்களை யோகா செய்ய சொல்வதோ இல்லை. மாறாக பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தான் உள்ளது என நச்சென்று பதிவிட்டுள்ளார்.

இந்த அருமையான கருத்துக்கு பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். பலநூறு பேர் அவரது ட்விட்டை மறுட்வீட் செய்துள்ளனர்.

கவர்ச்சி அறிவிப்பு என்ற மோடியின் மேம்போக்கு நாடகத்தை தோலுரித்த நேஹா துபியாவுக்கு நமது பாராட்டுகள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries