வைபவ், தன்ஷிகா நடிக்கும் ஆதாமும் ஆப்பிள்களும்

1437573875-7785ஸ்ரீகாந்த் நடித்த ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் இயக்குனரானவர், எஸ்.எஸ்.ஸ்டேன்லி. அதன் பிறகு புதுக்கோட்டையிலிருந்து சரவணன், மெர்க்குரி பூக்கள், கிழக்கு கடற்கரை சாலை என பல படங்கள் இயக்கினார்.

முதல் படம் தோல்வி என்றால் அதற்கடுத்தப் படங்கள் முந்தையப் படங்களைவிட மிகமோசமான தோல்வியை கண்டன. ஒருகட்டத்தில் நடிக்க ஆரம்பித்தார். அதுவும் கைகொடுக்கவில்லை. பிறகு மணிரத்னம் படத்தில் உதவியாளராக பணியாற்றினார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் இப்போது வைபவ், தன்ஷிகா நடிப்பில், ஆதாமும் ஆப்பிள்களும் என்ற காதல் படத்தை இயக்குகிறார்.

அவரது முந்தையப் படங்களைப் போல இதுவும் காதல் கதைதான். இந்தப் படத்தை முருகதாஸ் தயாரிக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online