மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே நாளை வெளிவரும் மஸான்

20cannes-richa-chadda5திரையில் வெளிவரும் முன்பே கேன்ஸ் விருது பெற்று விமர்சகர்களால் பாராட்டப்பட்டிருக்கும் ‘மஸான்’ திரைப்படம் நாளை ரசிகர்களுக்காக வெளிவர இருக்கிறது. இந்த திரைப்படத்தை சிறப்பு காட்சியில் பார்த்த இந்தி திரைப்பட நட்சத்திரங்களும் இதன் சிறப்பை பார்த்து மெய் சிலிர்க்கின்றனர்.

நான்கு சிறிய நகரங்களுக்கு இடையேயான பயணத்தை கதைக்களமாக கொண்டு உருவான இப்படத்தில் விக்கி கவுசால், ரிச்சா சந்தான் மற்றும் ஸ்வேதா திரிபாசு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் இயக்குனர் நீரஜ் கெய்வானின் முதல் படம் ஆகும். நீரஜ் இந்தி திரைப்பட உலகில் புரட்சி இயக்குனரான அனுராக் கஷ்யப்பிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

68-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வாங்கிய ஒரே இந்திய படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது.

தனது முதல் படத்திற்கு உலகளவில் அங்கீகாரம் கிடைத்தது குறித்து நீரஜ் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்தி திரையுலகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online