தி டர்டி பிக்சர் இயக்குனரின் படத்தில் சுருதி

Shruti-Hassan-Beautiful-Saree-Images-15நடிகை சுருதிஹாசன் சினிமாவுக்கு அறிமுகமானது இந்தி என்றாலும், அவர் தெலுங்கு படத்தின் மூலம்தான் பிரபலமானார்.

அதைத் தொடர்ந்து தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இருப்பினும், தான் அறிமுகமான இந்தி சினிமாவிலும் அவ்வப்போது நடித்து வருகிறார்.

இவர் இந்தியில் அக்ஷய்குமாருடன் நடித்த ‘கப்பார் இஸ் பேக்’ இந்த வருடம் வெளிவந்து ஹிட் ஆனது. மேலும், ஜான் ஆபிரகாம், அனில் கபூர் ஆகியோருடன் இணைந்து இவர் நடித்த ‘வெல்கம் பேக்’ படமும் விரைவில் வெளிவரவிருக்கிறது.

இந்நிலையில், பாலிவுட்டின் பிரபல இயக்குனர் மிலன் லூதிரா இயக்கும் புதிய படத்தில் சுருதி நடிக்கவிருக்கிறார்.

மிலன் லூதிரா இந்தியில் வித்யாபாலன் நடிப்பில் வெளிவந்து தேசிய விருது பெற்ற ‘தி டர்டி பிக்சர்’, ‘ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் மும்பை’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர்.

இவருடைய இயக்கத்தில் சுருதி நடிப்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக அஜய் தேவ்கான் நடிப்பது மேலும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.

இயக்குனர், லூதிரா எந்தவொரு கதாபாத்திரம் என்றாலும், அதை தத்ரூபமாகவும், அழகாகவும், அதே நேரத்தில் வித்தியாசமாகவும் காட்டுவதற்கு ரொம்பவும் சிரத்தை எடுத்துக் கொள்ளக் கூடியவர்.

அந்த வகையில் ‘தி டர்டி பிக்சர்ஸ்’ படத்தில் வித்யாபாலன் கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக கையாண்டிருந்தார். அதேபோல், இந்த படத்தில் சுருதிஹாசனை எந்த மாதிரி உருவாக்கப் போகிறார் என்பதே அனைவருடைய ஆவலாக இருந்து வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online