அருண் விஜய்யை தொடர்ந்து வில்லனாக மாறிய ஆதி

aadhiபல படங்களில் கதாநாயகனாக நடித்த வந்த அருண் விஜய், ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக அவதாரம் எடுத்தார். இது அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. கதாநாயகனாக நடித்து கிடைக்காத வரவேற்பு வில்லன் கதாபாத்திரத்திற்கு கிடைத்தது.

அந்த வரிசையில் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வந்த ஆதி தற்போது வில்லனாக அவதாரம் எடுக்கவுள்ளார். ஆனால் அவர் நடிக்க இருப்பது தமிழில் ஆல்ல தெலுங்கு படம்.

அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கும் படத்தில் ஆதி வில்லனாக நடிக்க இருக்கிறார். இந்த புதிய படத்தை போயாபட்டி ஸ்ரீனு இயக்குகிறார். ராகுல் பிரீத் சிங் நாயகியாக நடிக்கிறார்.

சமீபத்தில் ஆதி நடிப்பில் வெளியான ‘யாகாவாராயினும் நாகாக்க’ படம் ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பை பெற்றது. நாயகனாக கிடைக்காத வரவேற்பு வில்லன் கதாபாத்திரத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதி ஏற்கனவே இரண்டு தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார். மேலும் சமீபத்தில் வெளியான ‘யாகாவாராயினும் நாகாக்க’ படம் தெலுங்கில் ‘மலுபு’ என்ற பெயரில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries