கின்னஸ் சாதனைபடைத்த பாகுபலி

Baahubali1எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த பிரம்மாண்ட படம் ‘பாகுபலி’. மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்நிலையில், இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.303 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பெரிய சூப்பர் ஸ்டார்கள் எல்லாம் இல்லாமல் உருவான இப்படம், தென்னிந்திய சினிமாவிலேயே ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை பெற்றுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் செயல்படும் குளோபல் ஐக்கிய ஊடக நிறுவனம் பாகுபலி படத்தின் மிகப்பெரிய போஸ்ட்டரை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

இந்த போஸ்டர் 4,793.65 சதுர மீட்டர் பரப்பளவில் (51,598.21 சதுர அடி) உள்ளது. படத்தின் இயக்குனர் ராஜமௌலி இந்த சாதனையை படைத்த நிறுவனத்திற்கும் அதன் குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online