அஜித் படத்தில் வக்கீலான சுருதிஹாசன்

Shruti Hassan pink pant photo shoot PHOTOS (5)அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடிக்கிறார். இப்படத்தில் அஜித்தும் சுருதிஹாசனும் கால் டாக்சி டிரைவராக நடிக்கிறார்கள் என்று செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது சுருதிஹாசன் வக்கீலாக நடிக்கிறார் என்று தகவல் வந்துள்ளது.

தற்போது இதன் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. அங்கு சுருதிஹாசன் சம்மந்தப்பட்ட காட்சிகளை சிறுத்தை சிவா படமாக்கி வருகிறார். இதில் சுருதிஹாசன் வக்கீல் உடையில் ஓடுவது போன்ற காட்சி ஒன்றை படமாக்கியிருக்கிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதற்கு முன்னதாக இத்தாலி மற்றும் சென்னையில் இதன் படப்பிடிப்பு நடத்தினார்கள். இப்படத்தில் அஜித்துக்கு தங்கையாக லட்சுமி மேனனும் வில்லனாக கபீர் சிங்கும் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். ஏ.எம்.ரத்னம் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online