தெருநாய்களுக்கு ஆதரவாக விஷால் உண்ணாவிரதம்

Vishalகேரளாவில் தெருநாய்கள் கொல்லப்படுவதை எதிர்த்து தனியார் அமைப்பு ஒன்று நாளை (சனிக்கிழமை) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகிறது. இதில் விஷால் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளார்.

பொதுவாக எல்லா நட்சத்திரங்களும் நாய் ப்ரியர்கள். ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்ட நாய்களோ வளர்த்து வருகிறவர்கள். சொந்த வீடு, வெளியூர் சென்றாலும் நாய்களை கவனித்துக் கொள்ள வேலைக்காரர்கள் என்று அனைத்து வசதிகளும் இருப்பதால் நாய் வளர்ப்பது அவர்களைப் பொறுத்தவரை எளிதான, மனதுக்கு மகிழ்ச்சி தரும், ஹாபி. விஷாலும் ஒரு நாய் வளர்த்து வருகிறார்.

கேரளாவில் தெருநாய்களின் தொந்தரவு மிக அதிகம். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தரவே, கூட்டம் கூட்டமாக நாய்களை பிடித்து போய் கொன்று வருகிறார்கள். கண்டிப்பாக இது மோசமான நடவடிக்கைதான். இதற்கு எதிராக நடிகை ரஞ்சனி முதலில் குரல் கொடுத்தார். பிறகு ராய் லட்சுமி தனது எதிர்ப்பை தெரிவித்தார். தற்போது விஷால்.

நாளை படப்பிடிப்பு இருப்பதால் சில மணி நேரங்கள் மட்டும் உண்ணாவிதப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்க இருக்கிறார் விஷால். அதையடுத்த நாள் கோவையில் நடக்கும் இன்னொரு நாய்கள் பாதுகாப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries