கரகாட்ட கனகாவாக ஆசைப்படும் லட்சுமி மேனன்

1437729310-0849பட்டி தொட்டியெங்கும் வசூலில் பட்டையை கிளப்பிய படம், கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன்.

எளிய மனிதர்களின் எளிய கதை. கவுண்டமணி, செந்திலின் காமெடியும் சேர்ந்து, கரகாட்டக்காரனை எவர்கிரீன் ஹிட்டாக்கியது.

எந்தப் படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசை என்ற கேள்விக்கு நடிகை லட்சுமி மேனன், கரகாட்டக்காரன் என பதிலளித்துள்ளார். கரகாட்டக்காரன் படத்தில் வரும் கனகாவின் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது இவரது விருப்பமாம்.

தமிழில் வெளியான பழைய படங்கள் தற்போது ரீமேக்காகி வருகின்றன. கரகாட்டக்காரன் படமும் ரீமேக் முயற்சியில் இருக்கிறது. அதனால், லட்சுமி மேனனின் ஆசை நிறைவேற வாய்ப்புள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online