புவனா ஒரு கேள்விக்குறி அல்ல

1437726517-1653இவன் வேற மாதிரி படத்தில் அறிமுகமான சுரபி வேலையில்லா பட்டதாரியில் ஒரு சின்ன வேடத்தில் தோன்றினார். அவர் ஷோலோ ஹீரோயினாக நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் படம், புகழ். உதயம் மணிமாறன் படத்தை இயக்கியுள்ளார். ஜெய் நாயகன்.

இந்தப் படத்தில் தைரியமான, நேர்மையான புவனா என்ற கதாபாத்திரத்தில் சுரபி நடித்துள்ளார். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் கதாபாத்திரம். இந்த கதாபாத்திரம், என்னுடைய நிஜமான குணத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று புளகாங்கிதம் கொள்கிறார் சுரபி. அதாவது, நிஜத்தில் சுரபி ரொம்ப தைரியமான பெண்ணாம்.

படத்தில் உடன் நடித்த ஜெய் குறித்து கேட்டால் சுரபியின் முகம் பரவசமாகிறது. வழக்கம் போல் ஜெய்யின் தொழில் ஈடுபாடு, டெடிகேஷன் குறித்து சிலாகித்துவிட்டு அப்படியே கார் ரேஸுக்கு தாவுகிறார்.

ஜெய்க்கு கார் ரேஸில் இருக்கும் ஆர்வத்தை பரவசமாக குறிப்பிடுகிறவர், ஜெய் கார் ரேஸில் சாதிக்க வேண்டும் என்று டாப் கியர் போடுகிறார்.

காதல் கீதல் இல்லைதானே.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries