மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் – செப்டம்பரில் தொடங்குகிறது

1437723268-9491காக்கா முட்டை மணிகண்டனின் மூன்றாவது படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக ஏற்கனவே கூறியிருந்தோம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்குகிறது.

காக்கா முட்டை படத்தை முடித்ததும், விதார்த்தை வைத்து குற்றமே தண்டனை படத்தை ஆரம்பித்து அதனை முடித்தும்விட்டார் மணிகண்டன். விதார்த் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இளையராஜா இசையமைக்கிறார். பாடல்கள் இல்லாமல் இந்தப் படம் தயாராகிறது.

இதையடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை மணிகண்டன் இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் செப்டம்பரில் தொடங்குகிறது. படத்தை குறித்து பேசிய மணிகண்டன், காக்கா முட்டையைப் போன்ற யதார்த்த கதைக்களத்தில் இப்படம் தயாராகிறது. மான்டேஜ் பாடல்கள் படத்துடன் இணைந்து வரும் என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online