குறும்பட தயாரிப்பாளர்களுக்காக யூடியூப் சேனல் தொடங்கிய ஐஸ்வர்யா தனுஷ்

AishwaryaRajinikanth-799456இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் “டென் என்டர்டெயின்மென்ட்” எனும் யூடியூப் சேனல் ஒன்றை துவங்கி இளம் தலைமுறையினரை ஊக்கபடுத்தும் வகையில் அவர்களது குறும் படங்களை வெளியிட உள்ளார்.

தென் இந்தியாவில் இத்தகைய முயற்சி இதுவே முதல் முறையாகும். இந்த சேனல் வழியாக தற்பொழுது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட குறும்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படும்.

இதைப் பற்றி ஐஸ்வர்யா தனுஷ் கூறும்போது, “திறமையான பலருக்கு தங்கள் திறமைக்கான சன்மானம் கிடைக்காமல் போகிறது.

மேலும் அவர்களது திறமை யாருக்கும் தெரியாமலும் போய்விடுகிறது. டென் என்டர்டெயின்மென்ட் அப்படிப்பட்ட திறமையனவர்களுக்கான ஒரு மேடையாக இந்த சேனல் இருக்கும். முதலில் தென்னிந்திய மொழிகளின் குறும்படங்களை வெளியிட்டு பின்னர் மற்ற மொழி குறும்படங்களையும் வெளியிடுவோம்.

மேலும் டென் என்டர்டெயின்மென்ட், அதன் சகோதர நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ், டிஜிட்டல் கூட்டாளியான டிவோ ஆகியவற்றின் சமூக வலைத்தளங்கள் இந்த குறும்பட விளம்பரத்துக்கு பயன்படுத்திக்கொள்ளப்படும்” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries