கம்போடியா இனப்படுகொலையை மையப்படுத்தி படம் இயக்கும் ஏஞ்சலீனா ஜோலி

angelinajolieபிரபல ஹாலிவுட் நடிகையும், இயக்குனருமான ஏஞ்சலீனா ஜோலி இயக்கும் அடுத்த திரைப்படத்தை பற்றிய செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.

கம்போடியாவைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர் லூங் உங் என்ற பெண் தனது ஐந்து வயதில் ‘கெமர் ரோக் ரெஜிம்’ என்கிற கம்போடியாவின் இன அழிப்பிலிருந்து தப்பித்த உண்மைச் சம்பவத்தை படமாக்க இருக்கின்றனர்.

கம்போடியாவில் 1975-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு நிகழ்ந்த இந்த இனப்படுகொலையில் சுமார் 2 மில்லியன் கம்போடியர்கள் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவங்களை புத்தகமாக எழுதிய லூங் 2000-ஆம் ஆண்டு ‘பர்ஸ்ட் தே கில்டு மை பாதர்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். இத்திரைப்படத்தின் திரைக்கதையிலும் லூங் ஏஞ்சலீனாவுக்கு உதவி செய்திருக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கு ஏஞ்சலீனாவும், கம்போடியாவின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ரித்தி பன் என்பவரும் இணைந்து தயாரிக்க இருக்கின்றனர். ரித்தி ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட ‘தி மிஸ்ஸிங் பிக்சர்’ திரைப்படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படம் உலகின் முக்கிய சினிமா திரைப்பட விழாக்களுக்கு அடுத்த ஆண்டு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online