பெரிய இயக்குனர்களின் படங்களை இழந்த ஜெயம் ரவி

Jayam-Ravi-with-Seeman-for-Pagalavanநீண்ட இடைவேளைக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் ‘ரோமியோ ஜூலியட்’ வெளியானது. இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்றது. இதில் ஹன்சிகா ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படத்தையடுத்து இவரது நடிப்பில் ‘சகலகலா வல்லவன் அப்பாடக்கர்’, ‘தனி ஒருவன்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

மேலும் ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தை இயக்கிய ஷக்தி ராஜன் இயக்கும் படத்திலும் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் ‘பூலோகம்’ படமும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இடைப்பட்ட காலகட்டங்களில் கே.வி.ஆனந்த், கௌதம் மேனன் ஆகியோரின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் தான் தவறவிட்டதாக ஜெயம் ரவி கூறியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online