விஷாலுக்கு வில்லனான சத்யராஜ்?

Sathyaraj1விஷால் நடிப்பில் வெளிவந்த சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் லிங்குசாமி தற்போது முழு வீச்சில் களமிறங்கியிருக்கிறார். இதில், விஷாலே ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இவருக்கு ஹீரோயினாக நடிப்பதற்கு சமந்தா மற்றும் முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேலும், இப்படத்தின் முந்தைய பாகத்தில் நடித்த ராஜ்கிரண் இப்படத்திலும் விஷாலுக்கு அப்பாவாகவே நடிக்கிறார். மீரா ஜாஸ்மின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்திற்கு சத்யராஜ் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்தது. தற்போது சத்யராஜின் பெயர்தான் இந்த படத்தின் வில்லன் வேடத்திற்கு முதல் பரிசீலனையில் உள்ளதாம். அவர் மறுக்கும் பட்சத்தில் வேறு ஒருவரை அந்த வேடத்துக்கு தேர்வு செய்வார்கள் என தெரிகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பை வரும் செப்டம்பர் 9-ந் தேதி முதல் தொடங்கவிருக்கின்றனர். இரண்டாம் பாகத்தில் இசையமைப்பாளராக யுவனுக்கு பதில் இமான் இசையமைக்கிறார். லிங்குசாமி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ரஜினிமுருகன்’ படத்தின் பாடல்களை கேட்டு, இந்த வாய்ப்பை இமானுக்கு லிங்குசாமி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries