புலி டீசரைத் தொடர்ந்து பாடலும் புதிய சாதனை

Shruthi-with-Vijayவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘புலி’ படம் விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் விஜய் பிறந்தநாளில் வெளியிடப்பட்டது. இந்த டீசரை யூடிப்பில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து, அதற்கு பெரிய வரவேற்பு கொடுத்தனர்.

இந்நிலையில், இப்படத்தில் விஜய்யும் ஸ்ருதிஹாசனும் இணைந்து ஒரு பாடல் பாடியுள்ளனர். ‘ஏன்டி ஏன்டி’ என்ற அந்த பாடல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்த பாடல் வெளியானது முதல் இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த பாடலை கண்டுகளித்துள்ளனர். டீசருக்கு கிடைத்த வரவேற்பு இந்த பாடலுக்கும் கிடைத்துள்ளது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை வருகிற ஆகஸ்ட் 2-ந் தேதி மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக வெளியிட ஏற்பாடு செய்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் விஜய், அரசர் காலத்து உடையணிந்து நடித்துள்ளர். சிம்புதேவன் இயக்கியுள்ள இப்படம் பேண்டசி திரைப்படமாக உருவாகியுள்ளது. ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online