திருநங்கைகள் வேலைவாய்ப்புக்கு புதிய இணைய தளம்: நடிகை ஷகிலா தொடங்கி வைத்தார்

shakeelas-autobiography-400x252பாரதி கண்ணம்மா அறக்கட்டளை மற்றும் இந்திய திருநங்கை செயலகம் ஆகியவை சார்பில் இந்திய திருநங்கைகள் மாபெரும் விழா நேற்று மதுரை விக்டோரியா மன்றத்தில் நடந்தது. விழாவிற்கு மன்ற செயலாளர் இஸ்மாயில் தலைமை தாங்கினார்.

மதுரை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க தலைவர் பீட்டர் ரமேஷ்குமார், இணைச்செயலாளர் முகம்மது அப்பாஸ், வனத்துறை உயர் விஜிலென்ஸ் அதிகாரி ராஜ்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை ஷகிலா திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு இணைய தளத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

நான் பல ஊர்களுக்கு சென்று உள்ளேன். அங்கு எல்லாம் திருநங்கைகளை கலாட்டா செய்வதை தான் பார்த்து உள்ளேன். இங்கு தான் திருநங்கைகளுடன், பொதுமக்கள் இணைந்து சிறப்பாக விழா நடத்துகின்றனர். இதற்காக மதுரை மக்களை பாராட்டுகின்றேன்.

திருநங்கைகளுடன் நான் சுமார் 20 வருடங்களாக தொடர்பில் இருக்கிறேன். என்னுடைய வீட்டில் 3 திருநங்கைகள் பணி புரிந்து வருகின்றனர்.

மேலும் நான் பெற்றோர்களால் கைவிடப்பட்ட ஒரு திருநங்கையையும் தத்தெடுத்து கடந்த 5 வருடமாக மகளாக வளர்த்து வருகின்றேன். திருநங்கைகளை பெற்றோர்கள் வெறுத்து ஒதுக்காமல் அவர்களை ஒன்றிணைத்து வாழ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவின் இடை இடையே திருநங்கைகளின் தப்பாட்டம், ஆடல்பாடல், அழகிகளின் சிங்கார அணி வகுப்புகள் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. திருநங்கைகள் விழாவிற்காக ஏற்பாடுகளை திருநங்கைகள் பாரதி கண்ணம்மா, சுதா ஆகியோர் செய்திருந்தனர்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries