ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் பாபி சிம்ஹா

14-1418536760-bobby-simha-jigarthanda2354-600அமுல்பேபி முகத்துடன் அறிமுகமாகும் நடிகர்களும் நாலு படம் நடிப்பதற்குள், ஆக்ஷன் ஹீரோவாக முயற்சிக்கிறார்கள்.

ஆக்ஷன் செய்ய முடிந்தால் மட்டுமே முன்னணி நடிகராக முடியும் என்பதால், அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை.

பாபி சிம்ஹாவுக்கும் அப்படியொரு ஆசை இருப்பதில் வியப்பில்லை. ஆக்ஷன் ஹீரோ நாற்காலியை நோக்கிதான் அவரும் காய் நகர்த்துகிறார்.

தற்போது உறுமீன், பாம்பு சட்டை, மசாலா படம், பெங்களூர் டேய்ஸின் ரிமேக் என நான்கு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் உறுமீன் ஆக்ஷன் படம்.

பாம்பு சட்டையிலும் ஆக்ஷன் உள்ளது. ஆனால், முழுநீள ஆக்ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என்று அறிமுக இயக்குனர் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

பாபி சிம்ஹாவை முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக காட்டப்போகும் அந்தப் படத்தை விஜய் வாணன் என்பவர் இயக்குகிறார். பிற விவரங்களை தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்க உள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries