செப்டம்பரில் இரண்டாவது ஆட்டத்தை ஆரம்பிக்கும் ராஜமௌலி

rajamouli_630x450_71433681652பாகுபலி இன்னும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஆந்திராவில் தயாரான இந்த மெகா பட்டாசு சீனா, ஜப்பான் தேசங்களிலும் வெளியாகிறது. அங்கு புஸ்சாகுமா, பெரிதாக வெடிக்குமா என்று அறிய அனைவருமே ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

முதல் பாகத்தின் ஹேங்ஒவர் இன்னும் தீரவில்லை. அதற்குள் அடுத்த பாகத்தை செப்டம்பர் 15 -ஆம் தேதி தொடங்குவது என முடிவு செய்துள்ளனர். அப்படியானால், இரண்டாவது பாகம் முடிய முதல் பாகம் போல் 3 வருடங்கள் எடுக்குமா? அதுதான் இல்லை.

விஸ்வரூபம் படத்தை எடுக்கும் போதே கமல் இரண்டாம் பாகத்தின் பெரும்பாலான காட்சிகளை படமாக்கினார் அல்லவா. அதுபோல், பாகுபலியின் இரண்டாவது பாகத்துக்கான 40 சதவீத காட்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டன.

இனி 60 சதவீத காட்சிகளை எடுத்தால் போதுமானது. அதனால் 3 வருடங்கள் இரண்டாவது பாகத்துக்கு காத்திருக்க வேண்டியதில்லை. அடுத்த வருடமே படம் திரைக்கு வந்துவிடும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online