ஜி.வி.பிரகாஷின் பாட்ஷா புருஸ் லீ ஆனது

CK68BHGUAAAKnh3இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘திரிஷா இல்லனா நயன்தாரா’, ‘பென்சில்’ ஆகிய படங்கள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில், இயக்குனர் பாண்டிராஜின் உதவியாளர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்திற்கு முதலில் ரஜினி நடித்த ‘பாட்ஷா’ என்ற படத்தலைப்பை வைத்து, ‘பாட்ஷா என்கிற ஆண்டனி’ என்று வைக்க முடிவு செய்திருந்தனர். ஆனால், இந்த தலைப்பை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பதிவு செய்து வைத்திருப்பதால், அவர்களிடமிருந்து இந்த தலைப்பை பெற முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர். ஆனால், அது முடியாமல் போனது.

எனவே, தற்போது இப்படத்தின் தலைப்பை ‘புருஸ் லீ’ என்று மாற்றி வைத்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் தான் அடுத்தடுத்து நடிக்கும் படங்களில் தலைப்பையே வித்தியாசமாக தேர்வு செய்து வருகிறார்.

அந்த தலைப்புகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகின்றன. அந்த வரிசையில் இந்த படத்தின் தலைப்பும் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online