சிம்பு படம் ரிலீசுக்கு விஜய் உதவி

Vijay-helped-STR-for-Vaaluசிம்பு நடிப்பில் நீண்டகாலமாக கிடப்பில் கிடக்கும் படம் ‘வாலு’. இப்படத்தை வெளியிடுவதற்கு பல்வேறு முயற்சிகள் செய்தும், ஏதோவொரு காரணங்களால் படம் வெளியாவது தள்ளிக்கொண்டே போனது.

இந்த மாதத்தில் இப்படம் எப்படியாவது வெளியாகிவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், மேஜிக் ரேஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இப்படத்துக்கு மேலும் சிக்கல் அதிகமானது.

இந்நிலையில், ‘வாலு’ படத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து, நடிகர் விஜய் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு அறிந்துள்ளார். பின்னர், அந்த படம் வெளியாவதற்கு தன்னால் இயன்ற அளவு உதவி செய்வதாக தெரிவித்துள்ளாராம். தனக்கு தெரிந்த விநியோகஸ்தர்களிடம் இப்படம் வெளியாக உதவி செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளாராம்.

சிம்புவின் அப்பாவும், இயக்குனருமான டி.ராஜேந்தருக்கு விஜய் என்றால் ரொம்பவும் பிடிக்கும். அதேபோல், விஜய்யும் டி.ராஜேந்தர் மீது அதிக பற்று கொண்டவர்.

அவருடைய படத்துக்கு இதுபோல் ஒரு பிரச்சினை என்றதும், விஜய் அதை தாங்கிக் கொள்ளமுடியாமல் உதவ முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மரியாதை நிமித்தமாகவே இந்த உதவியை செய்வதாகவும் விஜய் தரப்பில் கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online