ஆர்யா-சந்தானம் கூட்டணியை பாராட்டிய ரஜினி

ARYA GETS BACK ATஆர்யா, சந்தானம், தமன்னா நடித்துள்ள படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. இப்படத்தை ராஜேஷ் இயக்கியிருக்கிறார். இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் ஆர்யா, சந்தானம், இயக்குனர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

இதில் சந்தானம் பேசும்போது, “ராஜேஷ் முதலில் என்னிடம் படத்தின் தலைப்பு ‘வி.எஸ்.ஓ.பி’ என்று சொன்னார். சொன்னவுடனே இந்த படம் வெற்றி அடையும் என்று சொன்னேன். இந்த தலைப்போட விரிவாக்கம் தான் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’.

நான் ராஜேஷ் இயக்கத்தில் ‘எஸ்.எம்.எஸ்’ படத்தில் நடித்தேன். ஒரு காமெடி நடிகனை போஸ்டரில் சின்ன போட்டோ மட்டும்தான் போடுவார்கள். ஆனால் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் அவர் ஒரு ஹீரோவுக்கு நிகரான காமெடி கதாபாத்திரத்தை உருவாக்கி என்னை அங்கீகரித்தார். எனவே, நான் ஹீரோ ஆனதற்கு முக்கிய காரணம் ராஜேஷ்.

நானும் ஆர்யாவும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். நான் சும்மா என்னுடைய ரசிகைகளிடம் சௌத் இந்தியா காமெடி சூப்பர் ஸ்டார் என்று கூறினேன். அதை கேட்ட ஆர்யா, சேட்டை படத்தில் காமெடி சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்துவிட்டார்.

அதன்பின்னர் ரஜினியுடன் நான் நடிக்கும் போது, அவர் என்னிடம், ‘என்ன… காமெடி சூப்பர் ஸ்டார் பட்டம் போட்டுட்ட?’ என்று கேட்டார்.

நான் உடனே, ‘சார் நான் காரணம் இல்ல, ஆர்யாதான் காரணம்’ என்று கூறினேன். அப்போது ஆர்யா-சந்தானம் காம்பினேஷன் நல்லா இருக்கு என்று அவர் பாராட்டினார். இந்த படம் நல்லா இருக்கும். எல்லாருக்கும் பிடிக்கும்” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries