விஜய்க்கு வில்லனாக தயார்: நட்டி நட்ராஜ்

B-WlljeCQAARabt-12விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘புலி’. சிம்புதேவன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நட்டி நட்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.டி.செல்வக்குமார் மற்றும் ஷிபு தமீன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் இயக்குனர் சிம்புதேவன், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ், தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர்கள் கலந்துக் கொண்டனர்.

சிம்புதேவன் பேசும்போது, ‘நான் முதலில் விஜய்க்குதான் நன்றி சொல்ல வேண்டும். அவரால்தான் இப்படம் இவ்வளவு பிரம்மாண்டமாக உருவானது. முதலில் அவரிடம் கதை சொன்னேன்.

சொன்ன உடனே ஓ.கே. சொன்னார். அவர் சொன்ன பிறகுதான் மற்ற நடிகர்கள் நடிகைகளிடம் கதை சொன்னேன். அனைவரும் நடிக்க சம்மதித்தார்கள். நல்ல பொழுது போக்கு படமாக இப்படம் உருவாகியிருக்கிறது. அனைவருக்கும் இப்படம் பிடிக்கும்’ என்றார்.

நட்டி நட்ராஜ் பேசும்போது, விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஒளிப்பதிவு செய்தேன். அப்போது, விஜய் என்னிடம் நல்ல கதை வரும்போது சொல்கிறேன் என் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டார். அதன்படி, ‘புலி’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய விஜய் அழைத்தார். 144 நாட்கள் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

மிக பிரம்மாண்டமான படமாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். நான் விஜய் நடித்த ‘யூத்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தேன். அப்போதிலிருந்து விஜய் சிறப்பான வளர்ச்சி பெற்றிருக்கிறார். விஜய் தான் சூப்பர் ஸ்டார். விஜய் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க அழைத்தால், கண்டிப்பாக நடிப்பேன் என்றார்.

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் பேசும்போது, எனக்கு மெலோடி பாடல்கள் ரொம்ப பிடிக்கும். அந்த வகையில் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி இப்பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். இப்படத்தில் 6 பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது.

அனைத்து பாடல்களும் சூப்பராக வந்துள்ளது. சமீபத்தில் வெளியான டீசர் மற்றும் ‘ஏண்டி… ஏண்டி…’ பாடல் ஆகியவை ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்றது. அதுபோல், இப்படத்தின் பாடல்களும் படமும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.

புலி படத்தின் பாடல்கள் ஆகஸ்ட் 2ம் தேதி பிரம்மாண்டமாக வெளியிடவுள்ளனர். செப்டம்பர் மாதம் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries