நல்ல கதைகளுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு: நைட்ஷோ விழாவில் சூர்யா பேச்சு

AL-Vijay-And-Suryaசத்யராஜ், அனு மோள், யூகிசேது, வருண் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘நைட்ஷோ’. திரைப்படங்களில் எடிட்டராக பணியாற்றி வரும் ஆண்டனி இப்படத்தை டைரக்டு செய்கிறார். ஏ.எல்.அழகப்பன், சாம்பால் தயாரிக்கின்றனர். மலையாளத்தில் வெளியான ‘ஷட்டர்’ படத்தின் தமிழ் ரீமேக் ஆக உருவாகிறது.

‘நைட்ஷோ’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர் சூர்யா இதில் பங்கேற்று டிரெய்லரை வெளியிட டைரக்டர்கள் கே.வி.ஆனந்த், கவுதம் மேனன், எஸ்.ஜே.சூர்யா பெற்றுக் கொண்டனர்.

விழாவில் சூர்யா பேசியதாவது:–

சினிமாவில் ஏற்றம் இறக்கங்கள் இருப்பது சகஜம். அதற்கு தகுந்த மாதிரி சத்யராஜ் கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். பல விஷயங்களில் நானும் அவரை பின்பற்றுகிறேன்.

என்னுடைய படங்கள் பலவற்றுக்கு ஆண்டனி எடிட்டங் செய்துள்ளார். அவர் எடிட் செய்த டிரெய்லரை பார்த்தாலே படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டி விடும். நிறைய ரசிகர்கள் பட்டாளத்தையும் வைத்து இருக்கிறார்.

நல்ல கதையம்சம் உள்ள படங்களை, ரசிகர்கள் விரும்புகிறார்கள். அந்த படங்களுக்கு வரவேற்பும் அளிக்கின்றனர். நைட்ஷோ படமும் ரசிகர்கள் விரும்பும் நல்ல கதையாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries