பறவை முனியம்மாவின் மருத்துவ செலவை ஏற்கும் விஷால்

Vishal-offers-to-help-Paravai-Muniyamma-696x465‘தூள்’ படத்தில் ‘மதுரை வீரன்தானே அவனை உசுப்பி விட்டே…’ என்று பாடி நடித்து பிரபலமானவர் பறவை முனியம்மா. தொடர்ந்து 30–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக சிவகார்த்திகேயனுடன் மான்கராத்தே படத்தில் நடித்தார். டெலிவிஷனில் சமையல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். பொது விழாக்களில் நாட்டுப்புற பாடல்களையும் பாடி வந்தார்.

சமீப காலமாக பறவை முனியம்மாவுக்கு படங்கள் இல்லை. இதனால் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டார். வயது முதுமை காரணமாக உடல் நலக்கோளாறும் ஏற்பட்டது. மருந்து வாங்கவும் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டார். ரேஷனில் அரிசி வாங்கி சாப்பிடுவதாகவும் கூறினார்.

இது பற்றிய தகவல் வெளியானதும் நடிகர் விஷால் அவருக்கு உதவி செய்ய முன் வந்தார். அவர் கூறும்போது, ‘பறவை முனியம்மா குடும்பத்தினருடன் நான் தொடர்பு கொண்டு பேசினேன்.

பறவை முனியம்மா குணமாகும் வரை அவரது ஆஸ்பத்திரி, மருத்துவ செலவுகள் முழுவதையும் ஏற்றுக் கொள்வதாக அவர்களிடம் தெரிவித்தேன்’ என்றார். மேலும் ஐயாயிரம் ரூபாய் கொடுத்ததுடன் இனி மாதாமாதம் ஐயாயிரம் ரூபாய் வழங்கி உதவுவதாக உறுதியளித்திருக்கிறார்.

இதையடுத்து பறவை முனியம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் நடக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries