அப்துல் கலாம் மறைவு: நடிகர்–நடிகைகள் அனுதாபம்

abdul_kalamமுன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவுக்கு நடிகர், நடிகைகள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

டைரக்டர் பாரதிராஜா:– அப்துல் கலாம் எளிமையாக பிறந்தார். எளிமையாக வாழ்ந்தார். எல்லோருக்கும் எடுத்துக்காட்டான மனிதராகவும் திகழ்ந்தார். அவர் மிகச்சிறந்த தமிழர். நமது கலாசாரத்தின் அடையாளம். அவரது மறைவு தேசத்துக்கு பெரிய இழப்பு. குறிப்பாக இளைஞர்களுக்கு பேரிழப்பு.

தனுஷ்:– அப்துல் கலாம் மறைவால் நம்நாடு மிகப்பெரிய இழப்பை சந்தித்து இருக்கிறது. மிகப்பெரிய பயங்கரமாக இதை உணர்கிறேன்.

சிவகார்த்திகேயன்:– ஏவுகணை மனிதர் அப்துல் கலாம். கோடிக்கணக்கான மக்களின் உத்வேகமாக இருந்தார். தற்போது அமைதியாக ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.

விஷால்:– முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மறைந்தது நாட்டுக்கு மிகப்பெரிய இழப்பு. என் வாழ்க்கையில் எப்போதும் அப்துல் கலாமைத்தான் முன் மாதிரியாக எடுத்துக் கொண்டேன். உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.

சூர்யா:– எப்படி பிறந்தோம் என்பதை விட எப்படி வாழ்ந்தோம் என்பதுதான் முக்கியம். உழைப்பும், தொலைநோக்கு பார்வையும் சாதாரண பேப்பர் போடும் பையனாக இருந்த உங்களை குடியரசுத் தலைவராக உயர்த்தியது. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்.

நடிகை குஷ்பு:– இந்தியாவின் விலை மதிப்பில்லாத பொக்கிஷம் நீங்கள். இந்த நாட்டுக்கு உங்களை போன்ற நல்ல ஆத்மாக்கள் தேவை. நாடே எழுந்து நின்று உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கும்.

பிரபுதேவா:– அதிக மக்களால் விரும்பப்பட்ட ஜனாதிபதி அப்துல்கலாம். சிறந்த ஆத்மா அவர் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும்.

நடிகை ஸ்ரீதேவி:– உலகம் முழுவதும் அறிவு தீபம் ஏற்றி வைத்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம்.

ஷாருக்கான்:– குர்தா ஸ்பூர் தீவிரவாத தாக்குதலை கேள்வியுற்ற வேதனையில் இருந்த நேரத்தில் டாக்டர் கலாம் மறைவு செய்தியும் சோகத்தை ஏற்படுத்தியது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries