சினிமாவை விட்டு விலக மாட்டேன்: திரிஷா

TrishaNewHotStills-10சினிமாவில் இருந்து ஓய்வு பெறும் திட்டம் இல்லை என்று நடிகை திரிஷா கூறினார். இது குறித்து திரிஷா அளித்த பேட்டி வருமாறு:–

நான் பணத்துக்காக நடிக்கவில்லை. பணத்தை முக்கியமாக கருதி இருந்தால் வருகிற எல்லா பட வாய்ப்புக்களையும் ஏற்றுக் கொண்டு நடித்து இருக்கலாம். ஆனால் நான் அப்படி பார்க்க வில்லை. நல்ல கதை. நல்ல கேரக்டர் அமைந்தால் மட்டுமே நடிப்பேன்.

பணமே முக்கியம் என்று நடித்தால் சினிமாவில் நிலைக்க முடியாது. 13 வருடமாக சினிமாவில் இருக்கிறேன். இதுவரை 48 படங்களில் நடித்து விட்டேன். எத்தனை படங்களில் நடித்தோம் என்பதை விட தரமான படங்களில் நடித்தோம் என்பதுதான் முக்கியம்.

அப்படியென்றால்தான் ரசிகர்களோடு இணைந்து இருக்க முடியும். சினிமாவில் இருந்து ஓய்வு பெற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நல்ல கேரக்டர்கள் எனக்கு அமைகின்றன. எனவே, சினிமாவில் தொடந்து நடிப்பேன். திருமணமான பிறகு கூட நடிகைகள் மீண்டும் நடிக்க வருகிறார்கள்.

இவ்வாறு திரிஷா கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online